Friday, August 29, 2014

RISHI PANCHAMI

http://isatsang.blogspot.in/2014/08/rishi-panchami.html#.VAEcRg3jf24.facebook www.astrospeak.com Rishi Panchami in 2014 The fast of Rishi Panchami is observed with utter devotion due to its significance Rishi Panchami 2014 date is 30 August, Tuesday. Rishi Panchami is taken as one of the most auspicious days by the people who follow Hinduism. All the sages of ancient time as well as the present time are respected on the day of Rishi Panchami. The festival of Rishi Panchami came into existence due to the pious efforts of Saptarishi that made the human life better. The term rishi denotes Sage and the term Panchami signifies the fifth day. Therefore the name Rishi Panchami denotes the commemoration of great sages on the fifth day of Shukla paksha in the month of Bhadrapad. Sapt rishi is a combination of seven learned sages, who devoted their lives for the betterment of humankind.They taught people the basic principles of taking goodness to a higher level and were very determined as far as their principles of living life were concerned. It is believed that they passed down their wisdom to the people so that people are able of follow the path of knowledge and become enlightened. The Great Legend Behind The Festival Rishi Panchami Let us know about the legend related to this festival while celebrating Rishi Panchami in 2014. Rishi Panchami is such an auspicious day that if the fast is observed and rituals are performed, a person is relieved from all the sins of his or her present or past life. Lord Brahma himself is the one who narrated the story of Rishi Panchami. According to him there was a simple Brahmin named Uttank who used to live with his wife sushila. Their daughter also lived with them who was a widow. One night several ants covered the body of the daughter and the parents were astonished to see this. They became extremely worried and immediately called a Sage so that he could mend up the situation. The Rishi whom they called was a learned sage and he explained the reason behind their trouble. He made them aware of the sin that their daughter committed in her previous life. He told them that their daughter entered in the kitchen in the days of her menstruation. The rishi advised the daughter to perform certain rituals on the day of Rishi Panchami that will purify her body and soul and this way she will be relieved of the sin that she committed. Following the instructions given by the sage the daughter performed all the customs with absolute devotion. This set her soul free from the dosha. Therefore, this little yet powerful story is a platform that explains the significance of the Rishi Panchami. Rishi panchami is road to peace and sanctification od soul, mind and body. Rituals to be performed on Rishi Panchami The rituals and customs dedicated to the rishi panchami must be performed with pure heart and good intentions. A person's intentions play a vital role in the purification of his soul. The devotees have to wake up early in the morning and take a bath as soon as they wake up. A fast is observed on the day Rishi Panchami. The one and only purpose of Rishi Panchami is to sanctify a person completely. Therefore, people do many things such as cleaning of teeth with Upmarga (herb) and bathing with datwan herb. These herbs are very verey pure and are considered to leave the body extremely clean. Herbs are used for the outer purification, whereas a mixture of curd, milk, basil and butter is drank to purify the soul. Worshipping the seven great sages known as sapt rishi is the concluding part of the rituals performed. The prayers are offered in order to invoke the presence of the seven sages and many didderent things such as food and flowers are offered. The name of those seven sages are as follows Kashyapa, Atri, Bharadvaja, Vishvamitra, Gauthama, Jamadagmi and Vashishtha. These sages put all their efforts only in the direction of making human life better. Therefore, these sage must not only be worshipped but also to be honored with complere dedication and piusness of heart. Observing a fast on Rishi Panchami in 2014 will end up the bad time of your life if they exit due to your previous birth sins. Involve yourself in the celebrations and rituals of Rishi Panchami in 2014 and get blessed with the sanctification of your whole being.

Monday, March 10, 2014

காரடையான் நோம்பு ஒரு யதார்த்த பதிவு :- இந்த வருடம் காரடையான் நோம்பு மார்ச் மாதம் 14தேதி வெள்ளிகிழமை அன்று வருகின்றது . நோம்பு சரடு கட்டிக்கொள்ள வேண்டிய சமயம் மாலை8.15 PM-9.15 PM (ISD) TIME. இந்த நோம்பு மாசியும் -பங்குனியும் சேரும் நேரத்தில் கொண்டாடபடுகின்றது. காரடையான் நோம்பு ஸ்லோகத்தை பார்க்கும் முன் எதற்கு கொண்டாடுகின்றோம் என்பதை அறிவோமா சகோதரிகளே !!!!!! காதல் அந்தக்காலத்திலும் இருந்திருக்கிறது ,ஆனால் அது மிகப்புனிதமான ஒன்றாகவும் சுயநலமில்லாததாகவும் இருந்தது அது இதயத்தினில் கலந்துவிட்ட ஒன்று சாவித்திரி ஒரு ராஜகுமாரி தந்தை அசுவபதி ,,, ஒருநாள் தன் தோழிகளுடன் வனத்திற்குச் சென்றாள். அழகான நீர்வீழ்ச்சியைக்கண்டு மனம் பரவசம் அடைந்தாள் கூடவே ஒரு சுந்தரமுகமும் தெரிய ஆவலுடன் அந்தத்திசையில் நோக்கினாள் ஒரு அழகான வாலிபன் அவள் மனதைக்கொள்ளைக்கொண்டான். அந்த நிமிடமே அவனே தன் புருஷன் என்று தீர்மானமும் கொண்டாள், மாளிகைக்குத்திரும்பி வந்து தன் தந்தையிடம் தன் விருப்பத்தைத்தெரிவித்தாள்,அந்தச்சம்யம் "நாராயணா நாராயணா " என்றபடியே நாரதர் நுழைந்து பின் விவரம் அறிந்து அந்த வாலிபன் "சத்தியவான்" எனவும் அவன் இன்னும் ஒருவருடத்தில் மரணம் அடைவான் என்றும் குறிப்பிட்டு பின் எச்சரிக்கிறார் சாவித்திரி. இதில் மிக உறுதியாக இருந்ததால் அரசர் தன் மகளைச் சத்த்ய்வானுக்குத் திருமணம் செய்துக்கொடுத்தார் அரண்மனை வாசம் போய் காட்டின் அருகில் ஒரு சின்ன வீடு ,, மாளிகைவிட்டு வந்த சாவித்திரி அதிலும் இன்பத்தைக்கண்டாள் தன் புருஷனின் உயிரைக்காக்க பார்வதி செய்த விரத்ததை மேற்கொண்டாள். அங்குக்கிடைத்த நெல்லிருந்து அரிசியைப் பொடியாக்கி அதில் காராமணியும் சேர்த்து அடைப்போல் தட்டி வெண்ணெயுடன் நைவேத்தியம் செய்தாள் , பின் மஞ்சள் சரடை சுமங்கலியாக இருக்கப்பிரார்த்தித்து கட்டிக்கொண்டாள் . அந்த நாளும் வந்தது சத்தியவான் விற்கு வெட்டும் போது பாம்பின் ரூபமாக யமன் வந்தான் , அவனைக்கொட்டினான் தள்ளாடியபடியே அவன் கீழே சாய சாவித்திரி அவனைத்தாங்கிக்பிடித்தாள். கற்பின் சக்தியால் யமனும் அவள் கண்ணில் பட்டான் அவன் உயிரைக்கொடுக்கும்படி வாதித்தாள் கதறி அழுதாள் பின் தொடர்ந்தாள் அவள் கண்ணீர் அவன் மனதை நெகிழ வைத்தது 'சாவித்திரி நான் என் கடமையைத்தான் செய்கிறேன் அவன் உயிரைத்தவிர வேறு என்ன வரம் வேண்டுமானாலும் கேள் தருகிறேன் " என்றான் " யமராஜனே என் வம்சம் வாழையடியாகத்தழைத்து வளர வேண்டும் " " சரி அப்படியே ஆகட்டும் தந்தோம் " என்று சற்றும் யோசிக்காமல் வரம் வழங்கினான் " உங்கள் வரம்படி சத்தியவான் இல்லாமல் குலம் எப்படித்தழைத்து ஒங்க முடியும் "என்று பதிலுக்கு சாவித்திரி கேட்க வேறு வழியில்லாமல் யமதர்மராஜன் சத்தியவானின் உயிரைத்திரும்பிக்கொடுத்தான் சாவித்திரியின் பக்தியும் அன்பும் கற்பும் யமனையும் வென்று தன் புருஷனை மீள வைத்தன , இந்தக்கதை சாதாரணமாக எல்லோருக்கும் தெரியும் இது போல ஒன்றை வடநாட்டில் கரவாசௌத் என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள் காலையிலிருந்து தண்ணீர் கூடக்குடிக்காமல் இரவில் சந்திரனைப்பார்த்தப்பின்னர் தான் சாப்பிட்டு விரதத்தை முடிக்கிறார்கள் ,என் மருமகள் வடநாட்டில் இருந்து பழக்கப்பட்டதால் அந்த நோம்பும் செய்ய என் மகனும் அன்று முழுவதும் பட்டினி கிடப்பான் , பெண்களுக்குத்தானா புருஷன் முக்கியம் ஆண்களுக்கும் இதே உணர்வு உண்டே "என்று சொல்லும்போது இது போல் ஆண்களுக்கும் எதாவது விரதம் இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது ,ஆனால் அந்த நோன்பு தீபாவளிக்குப்பின் வரும் என்ற ஞாபகம். நம் நோன்பு மாசிமாதம் பங்குனி மாதம் கூடும் நேரத்தில் வரும் "மாசிக்கயிறு பாசிப்படியும்" என்று சொல்வார்கள் ஆகையால் மாசி முடியும் தருவாயிலேயே இதை அனுஷ்டித்துவிடுவது வழக்கம். அம்மனுக்கு கார் அரிசியும் காராமணியும் கலந்து செய்த அடையும், உருகாத வெண்ணெயும் நிவேதனம் செய்வார்கள். நோன்புச் சரட்டில் மலரைக் கட்டி பூஜையில் வைத்து கழுத்தில் கட்டிக் கொள்வார்கள் “மாசிக்கயிறு பாசி படியும்” என்று, பங்குனி முதல்நாளில் புதிய மங்கலச் சரடை மாற்றிக் கொள்வது விசேடமானதாகக் கருதப்படுகிறது. என் அம்மா இந்த நோம்பு செய்யும் போது கீழ் வரும் ஸ்லோகத்தை சொல்லவும். 'உருக்காத வெண்ணையும் ஓரடையும் நான் நூற்றேன் .அதாவது " உருகாத வெண்ணையுக் ஓரடையும் நான் வைக்க என் கணவன் என்னைவிட்டு என்றும் பிரியாமல் இருக்கவேணும் " ( 'நூற்றேன்' என்பதற்கு 'தருவேன்' என்று சொல்வதும் உண்டு) என்று சொல்லியபடியே சரடை அணிந்துக்கொள்வார்கள் , அதே போல் என்னுடைய சகோதரிகளையும் அணியச்சொல்வார் எனது தாய். " அம்மா எங்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையே " என்று சகோதரிகள் கேட்டால் " எங்கேயாவது பிறந்திருப்பானே" என்று முடிப்பார். எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது " அந்த வெண்ணெய் எப்படி உருகாமல் இருக்கும் "? இதை என் அம்மாவிடம் கேட்டபோது அந்தக்கால பதிவிரதையால் கற்புக்கரசியினால் இது சாத்தியமாகும் என்றார் ,,, எல்லாமே உலகத்தில் அன்பும் பாசத்திற்கும் கட்டுப்பட்டு உறவுகள் பின்னப்ப்டுகின்றன ,,,,,,, இந்தக்கால்த்தில் தாலிக்கு இத்தனை மதிப்பு கொடுக்கபடுகிறதா ? அல்லது இருமனம் ஒருமனம் ஆனாலே போதும் என்று நினைக்கப்ப்டுகிறதா ? விஜய் டிவியில் "நீயா நானா "வில் இதுவும் அலசப்பட்டுவிட்டது. மிகவும் அழகான விரதம் இது. கடைக்கண் பார்வையில் காதலும். உள்ளத்தில் பக்தியும், புத்தியில் சிரத்தையும் கூடி செய்யும் விரதம். அன்று மட்டுமல்லாது, வாழ்க்கை முழுவதும் இந்த சுலபமான ஸ்லோகத்தை சொல்லலாம் - ஆண்களும் தான். மங்களே மங்களாதாரே மாங்கல்யே மங்களப்ப்ரதே மங்களார்த்தம் ம்ங்களேசி மாங்கல்யம் தேஹி மே ஸதா!!

Saturday, February 22, 2014

ஸ குங்கும விலேபனாம் அளிக சும்பி கஸ்தூரிகாம் ஸமந்த ஹஸிதேக்ஷணாம் ஸ ஸரஸாப பாசாங்குசாம் அசேஷஜ நமோஹினீம் அருணமால்ய பூஷாம்பராம் ஜபாகுஸூம பாசுராம் ஜப விதௌ ஸ்மரேத் அம்பிகாம் என்று லலிதாசகஸ்ரநாமத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

அதாவது குங்குமப்... பூவின் விழுதைப் பூசிக் கொண்டிருப்பவளும், நெற்றியை அலங்கரிக்கும் கஸ்தூரி திலகம் இட்டவளும், புன்னகைக்கும் கண்கள் உள்ளவளும், வில், அம்பு, பாசம், அங்குசம் ஏந்தியவளும், எல்லா மக்களையும் தன்பால் ஈர்ப்பவளும், செந்நிற மாலை, ஆடைகள் அணிந்து, செம்பருத்திப் பூ போல ஒளிமயமாக இருப்பவளுமான அம்பிகையை ஜபகாலத்தில் நினைவு கொள்கிறேன் என்பதுதான் இதன் பொருள். அம்பாள் உமைக்கு பல அம்சங்கள். திரிபுரசுந்தரி, காமாட்சி, அபிராமி, பார்வதி, லலிதா என்று பல திருநாமங்கள். ஒவ்வொரு அம்சத்திலும், பல பாக்கியங்களை பக்தர்களுக்கு அள்ளித் தருகிறாள் அம்பாள். எப்போதும் சுமங்கலியாகவே இருப்பவள் லலிதா” என்று லலிதா சகஸ்ரநாமத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. சுமங்கலியான பெண்ணை பளிச்சென்று வெளிப்படுத்துவது, அவளது நெற்றியில் அலங்கரிக்கும் குங்குமம்தான். ஒரு பெண் தன் திருமணத்தின் போதுதான் குங்குமம் வைத்துக் கொள்ளும் தகுதியைப் பெறுகிறாள். நெற்றியிலுள்ள குங்குமம், ஒரு பெண்ணின் சுமங்கலித் தன்மையை மட்டும் சொல்வதல்ல. அவளுக்குள்பொதிந்திருக்கும் ஞானத்தையும், ஆற்றலையும் குறியீடாக உணர்த்தும் தன்மையும் கொண்டது. சௌந்தர்ய லஹரியும் லலிதா சகஸ்ரநாமமும் குங்குமத்தின் பெருமைகளை எடுத்து வைக்கின்றன.

சுமார் 5,000 வருடங்களாக, குங்குமம் வைத்துக் கொள்வது என்பது நமது சம்பிரதாயமாக இருந்து வருகிறது என்கிறது ஒரு புராணத் தகவல். இரண்டு இமைகளுக்கு நடுவில் நெற்றிப் பொட்டில் குங்குமம் வைத்துக் கொள்வதற்குப் பல காரணங்கள் உண்டு. நமது உடலில் ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் ஏழு சக்கரங்கள் உள்ளன. நமது செயல்கள், சாதனைகள், சாகசங்கள் என்று அனைத்துக்குமே காரணமாக அமைந்தவை இந்தச் சக்கரங்கள். இந்தச் சக்கரங்களின் செயல்பாட்டைத் தூண்டி விடுவதில், முதுகுத் தண்டுக்கு அடிப்பகுதியில் பொக்கிஷமாக இருக்கும் குண்டலினி சக்திக்கு பெரும்பங்கு உண்டு. யோகம், தியானம் போன்றவற்றின் மூலம் குண்டலினி சக்தியை எழுப்பி, இந்த ஏழு சக்கரங்களைத் தூண்டி விடலாம். இந்த ஏழு சக்கரங்களில் ஒன்றான ஆக்ஞை, நெற்றிப்பொட்டில், புருவங்களின் மத்தியில்தான் உள்ளது. ஒருவரின் ஞானம், பேரறிவு ஆகியவை வெளிப்பட காரணமாக அமைவது இந்த ஆக்ஞா சக்கரம் தான். அதைக் குறித்துத்தான் நெற்றிப்பொட்டில் குங்குமம் வைக்கிறோம்.
ஆனால் திலகமிடுவது மங்கள குறியீடு மட்டுமல்ல அதனுள் வேறு சில அர்த்தங்களும் பொதிந்துள்ளது

மனிதனது மூளையின் மையப்புள்ளி இரண்டு புருவங்களுக்கு மத்தியில் அமைந்துள்ளது இதன் வழியாக பிரபஞ்ச ஈர்ப்பு விசையும் வேறு மனிதர்களின் என்ன பதிவுகளும் நேரடியாக மூளையில் பதிந்து அதற்கான அதிர்வுகளை உருவாக்குகிறது அந்த அதிர்வுகள் நல்லதாக இருக்கும் பட்சத்தில் சிக்கல்கள் இல்லை வேறுமாதிரியாக அமைந்தால் பிரச்சனை தான்

வேறு மாதிரியான அதாவது எதிர்மறையான பதிவுகள் மூளையை அண்டாமல் புருவங்களுக்கு மத்தியில் வைக்கப்படும் திலகமோ விபூதி மற்றும் சந்தனமோ தடுத்துவிடுகிறது இதனால் நமது மூளையானது எப்போதும் எதிர்மறை சக்திகளால் தாக்கப்படுவது தவிர்க்க பட்டு விடுகிறது எனவே தான் நமது முன்னோர்கள் வெறும் நெற்றியோடு யாரும் இருக்க கூடாது என்று சொன்னார்கள்.
See More
நமஸ்காரம் செய்யும்போது..
(ஒரு கேள்வி-பதில் “வேதமும் பண்பாடும்” நூலிலிருந்து)
கேள்வி : பெரியவர்களுக்கு நமஸ்காரம் செய்வதில் ஏதாவது நியமம் உண்டா?
பதில் : ஆம். உண்டு. இதோ சிலவற்றை இங்கு பார்ப்போம்.

* படுத்துக் கொண்டிருப்பவர்களையும், ஜபம் செய...்து கொண்டிருப்பவர்களையும் ஈரத்துணி உடுத்திக் கொண்டிருப்பவர்களையும் நமஸ்கரிக்கக் கூடாது.
* அபிவாதனத்தை தெளிவாகச் சொல்ல வேண்டும்
* பெண்களுக்கு நமஸ்காரம் செய்யும்போது அபிவாதனம் சொல்லக் கூடாது. ஆனால் தாயாருக்கு மட்டும் அபிவாதனம் உண்டு.
* அதே போல் ஸன்னியாசிகளுக்கும், பலர் கூடியிருக்கும் சபையிலும் நமஸ்காரம் மட்டும்தான் செய்ய வேண்டும். அபிவாதனம் கிடையாது.
* கோவில்களில் மனிதர்களுக்கு நமஸ்காரம் செய்யக் கூடாது.
* கடவுளை நமஸ்காரம் செய்யும்போது ஆண்கள் “தண்டவத் ப்ரணமேத்” என்று சொல்லியுள்ளது. தண்டம் சமர்ப்பித்தல் என்பது, ஒரு கொம்பை (கோலை) எடுத்து நிறுத்தி கைகளை எடுத்துவிட்டால் எப்படி கீழே விழுந்து விடுமோ அதுபோல் இந்த உடல் என்னுடையதில்லை நீர் தந்தது தான் என்ற உணர்வுடன் அப்படியே கடவுளின் முன் விழுவதாகும். இதையே ஸாஷ்டாங்க நமஸ்காரம் என்றும் கூறலாம்.

ஸ்த்ரீகளுக்கு ஸாஷ்டாங்க நமஸ்காரம் கிடையாது. பதிலாக பஞ்சாங்க நமஸ்காரம் சொல்லியுள்ளது.

நமஸ்காரம் செய்யும்போது பிறர் நம்மை பார்ப்பார்களே என்று நினைப்பதோ, வெட்கப்படுவதோ, கூச்சப்படுவதோ கூடாது.
அந்த விவசாயியின் ஜாதகத்தை சோதித்து பார்த்த ஜோதிடருக்கு , உள்ளூர தயக்கம் !
காரணம் , அன்றிரவு எட்டு மணிக்கு அந்த விவசாயிக்கு மரணம் நேரக்கூடிய கண்டம் இருந்தது ; அதை ..அவனிடம் நேரிடையாக சொல்ல விரும்பாமல் ,
'' ஐயா ...எனக்கு நிறைய வேலைகள் உள்...ளன ...உங்கள் ஜாதகம் என்னிடமே இருக்கட்டும் !..நாளை காலையில் என்னை வந்து பாருங்கள் !''
என்றார் ;
ஜோதிடரின் வீட்டிலிருந்து புறப்பட்ட விவசாயி , தன் கிராமத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தபோது , மாலை சாய்ந்து இருள் சூழ ஆரம்பித்தது ! அப்போது , லேசாக மழைத்தூறல் ஆரம்பிக்க ......சற்றைக்கெல்லாம்
பெருமழை கொட்ட துவங்கியது! மழையில் நனைந்தவாறே ,சுற்றுமுற்றும் பார்வையை சுழலவிட்டவனின் கண்களில்
..அந்த .பாழடைந்த சிவன் கோயில் தென்பட......ஓடோடிச்சென்ற அவன் , கோயிலின் முன்னே இருந்த மண்டபத்தில் ஒதுங்கினான்:
..மண்டபத்தில் நின்றவாறே , கோயிலின் பாழடைந்த நிலை கண்டு உள்ளூர வருந்தினான் ! தன்னிடம் போதுமான பணம் இருந்தால் அக்கோயிலை புதுப்பிக்கும் வேலையை செய்வேன் என்று மானசீகமாக நினைத்துக்கொண்டதோடு நில்லாது .....அக்கோயிலை புதுப்பிப்பதாக மானசீகமாக கற்பனையும் செய்து கொண்டு ....கோபுரம் ...ராஜகோபுரம் ...உட்பிராகாரங்கள் மற்றும் ..மண்டபங்கள் முதலானவற்றை மனதிற்குள் கற்பனையாகவே அமைத்து ....வேதியர்கள் புடைசூழ கும்பாபிஷேகமும் விமரிசையாக நடத்தி .....இப்படி தன்னை மறந்து சிந்தனைகளில் ஈடுபட்டிருந்தவனின் பார்வை தற்செயலாக மண்டபத்தின் எதிரே நோக்க .......
அங்கே ஒரு பெரிய கருநாகம் படமெடுத்த நிலையில் ..அவனை கொத்த தயாராக இருந்தது !! சூழ்நிலையின் விபரீதத்தை உணர்ந்த அவன் , மறுகணம் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடி வரவும் ,மண்டபம் ' கிடுகிடு ' வென்று இடிந்து விழவும் சரியாக இருந்தது ! இப்போது மழையும் நின்று விட்டிருக்க ....விவசாயியும் வீடு போய் சேர்ந்தான் :
பொழுது விடிந்ததும் முதல் வேலையாய் ஜோதிடர் வீட்டுக்கு சென்ற அவனை கண்டு ஜோதிடருக்கு வெகு ஆச்சரியமும் , திகைப்பும் !
' எப்படி இது சாத்தியம் ? நாம் ஜோதிடக்கணக்கில் தவறிவிட்டோமோ '
பலவாறான எண்ண அலைகளுடன் மீண்டும் அவனது ஜாதகத்தை அவர் ஆராய ..
.அவரது கணக்கு சரியாகவே இருந்தது! பின் , ஒரு உந்துதலின் பேரில்அவர் ஜோதிட நூல்களை துல்லியமாக ஆராய்ந்த அக்கணம் ....
' இப்படிப்பட்ட கண்டத்திலிருந்து ஒருவன் தப்ப வேண்டுமானால் , அவனுக்கு ஒரு சிவன் கோயிலை கட்டி முடித்து , கும்பாபிஷேகமும் செய்த புண்ணியம் இருக்கவேண்டும் '
என்று ஜோதிட நூலில் குறிப்பிட்டிருந்தது !
' ஒரு ஏழைக்கு , சிவன் கோயிலை கட்டி , கும்பாபிஷேகமும் செய்வது என்பது எப்படி சாத்தியம் '
என்று எண்ணியவாறே ஜோதிடம் அறிவித்த அனைத்து விவரங்களையும் அவனிடம் அந்த ஜோதிடர் இப்போது எடுத்துரைக்க .....அவனோ , வெகு இயல்பாக முந்திய நாள் இரவு தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை அவரிடம் எடுத்துரைத்தான் !!..
தெய்வப்பணி பற்றிய கற்பனை கூட இடையூறுகளை நீக்கும் !
நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் !
See More

— with Mrt Srinivasan and 4 others
தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. அவற்றைத் தெரிந்து கொள்வோம்.!

அ -----> எட்டு
ஆ -----> பசு
ஈ -----> கொடு, பறக...்கும் பூச்சி
உ -----> சிவன்
ஊ -----> தசை, இறைச்சி
ஏ -----> அம்பு
ஐ -----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு
ஓ -----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை
கா -----> சோலை, காத்தல்
கூ -----> பூமி, கூவுதல்
கை -----> கரம், உறுப்பு
கோ -----> அரசன், தலைவன், இறைவன்
சா -----> இறப்பு, மரணம், பேய், சாதல்
சீ -----> இகழ்ச்சி, திருமகள்
சே -----> எருது, அழிஞ்சில் மரம்
சோ -----> மதில்
தா -----> கொடு, கேட்பது
தீ -----> நெருப்பு
து -----> கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு
தூ -----> வெண்மை, தூய்மை
தே -----> நாயகன், தெய்வம்
தை -----> மாதம்
நா -----> நாக்கு
நீ -----> நின்னை
நே -----> அன்பு, நேயம்
நை -----> வருந்து, நைதல்
நொ -----> நொண்டி, துன்பம்
நோ -----> நோவு, வருத்தம்
நௌ -----> மரக்கலம்
பா -----> பாட்டு, நிழல், அழகு
பூ -----> மலர்
பே -----> மேகம், நுரை, அழகு
பை -----> பாம்புப் படம், பசுமை, உறை
போ -----> செல்
மா -----> மாமரம், பெரிய, விலங்கு
மீ -----> ஆகாயம், மேலே, உயரம்
மு -----> மூப்பு
மூ -----> மூன்று
மே -----> மேன்மை, மேல்
மை -----> அஞ்சனம், கண்மை, இருள்
மோ -----> முகர்தல், மோதல்
யா -----> அகலம், மரம்
வா -----> அழைத்தல்
வீ -----> பறவை, பூ, அழகு
வை -----> வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல்
வௌ -----> கௌவுதல், கொள்ளை அடித்த.

#SK
See More
நல்ல நாள் நேரம் பார்ப்பது எப்படி?

நல்ல நேரம் பார்க்கும் பொழுது கவனிக்க வேண்டியவை…….

சுபம் செய்யும் அன்றைய நாள் கரிநாளாக இருக்கக்கூடாது.

திதியில் அஷ்டமி, நவமி திதிகளைத் தவிர்க்க வேண்டும்.

யோகம் மரணயோக வேளையாக இல்லாமல் சித்த, அமிர்த யோகமாக இருக்கவேண்டும்.
...
ஓரைகளில் சூரியன், செவ்வாய், சனி ஓரை இல்லாமல் பிற ஓரைகள் வரவேண்டும்.

பஞ்சகங்களில் பொதுவாக அக்கினிஸ சோர, ரோக பஞ்சகங்கள் இல்லாமல் இருக்க வேண்டும்.

முக்கியமாகக் கீழ்க்கண்ட பஞ்சகங்களில் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டியவை

அக்கினி, சோர, ரோக பஞ்சகங்கள்
திருமணம், சீமந்தம், புதுமனை கோல, குடிபோக.

மிருத்யு பஞ்சகம்
பங்குத் தொழில், லிமிடெட் கம்பெனி போன்ற தொழில்கள் ஆரம்பிக்கக் கூடாது.

அக்னி பஞ்சகம்
பஞ்சு, பெட்ரோல் பொருள்கள், நூல், துணி வகைகள் மற்றும் வெடி மருந்து சம்பந்தப்பட்ட தொழில்கள் தொடங்கக்கூடாது.

இராஜ பஞ்சகம்
அரசு வங்கி மற்றும் பொது நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் வாங்கி நடத்தும் தொழில் தொடங்கக் கூடாது.

நிஷ் பஞ்சகங்கள் மிக்க சுபம்.

இராகு காலம், எமகண்டம் நேரங்கள் இருக்கக் கூடாது.

கெளரி பஞ்சாங்கத்தில் ரோக, சோர விஷ காலங்கள் இருக்கக் கூடாது.

முக்கியமாக அந்த நட்சத்திரக்காரருக்கு அன்றைய தினம் சந்திராஷ்டிர தினமாக இருக்கக்கூடாது.

மேற்கண்டவற்றை அந்தந்த தேதி மற்றும் ஊர்களின் உதய நேரத்தை அனுசரித்து கணித்துக் கொள்ளவும்.
யாருக்கெல்லாம் நரகம் :
- வியந்து படித்து

பரதன், கோசலையிடம், “கீழே குறிப்பிடப் படுவோர் செய்யும் குற்றங்களால் அடையும் நரகத்தை நான் அடைவேனாக” என்று சூளுரைக் கிறான்.

1. அறத்தைக் கெடுக்க முயன்றவன்....
2. இரக்க மற்ற இதயம் உடையவன்.
3. பிறரிடம் சென்று யாசிப்பவன்.
4. யாசிப்பவனைக் கோபிப்பவன்.
5. பாபம் கருதாது உயிர்க்கொலை செய்பவன்.
6. துறவிகளுக்குத் துயர் தருபவன்.
7. தன் பெற்றோர், உடன் பிறந்தோர், பெண்களைக் கொன்றவன்.
8. பிறர்உழைத்துச் சேர்த்த செல்வத்தை அபகரித்த வன்.
9. தாய் பசித்திருக்கத் தான் மட்டும் தனித்து உண்டவன்.
10. தன்னை நம்பித் தந்த பொருளைத் திருப்பித்தராது, தானே உரிமையாக்கிக் கொண்டவன்.
11. பொய்சாட்சி சொன்னவன்.
12. போருக்குப் பயந்தவன்.
13. அந்தணர் வாழும் வீடுகளைத் தீக்கு இரையாக்கியவன்.
14. குழந்தையைக் கொன்றவன்.
15. பொய்வழக்குத் தொடுத்தவன்.
16. தெய்வங்களை நிந்தித்தவன்.
17. கன்றுக்குப் பால் தராது, பசுவிடம் பாலை ஒட்டக் கறந்தவன்.
18. நீதிமன்றத்திலேயே, பிறர் பொருளைக் களவாடியவன்.
19. ஒருவர் செய்த நன்றியை மறந்தவன்.
20. நயமில்லாத நாவை உடையவன்.
21. கன்னியைக் கற்பழிக்கக் கருதியவன்.
22. குருவின் மனைவியைத் தன் கண்களாலேயே கற்பழித்தவன்.
23. வேறொருவன் மனைவியைச் சுகித்தவன்.
24. குற்றமில்லாக் குலத்தினருக்கு ‘மாசு’ செய்தவன்.
25. ஏழைகளின் பொருளுக்குக் குறைந்த விலை தந்து ஏமாற்றியவன்.
26. ஒருவன் உண்ணும் உணவைப் பிடுங்கி எறிந்த வன்.
27. உரியவர்க்குரிய பொருளை ‘இல்லை’ என்று மறுத்தவன்.
28. கொடுத்து உதவாதவன்.
29. நல்லறிவில்லாதவன்.
30. நோயுற்றவனைக் காப் பாற்றாது, அவர்களையே கொலைக் கருவியால் தாக்கியவன்.
31. தன் பகைவரை வென்று, அவர்களை இளம் பெண்கள் முன்பு, தலைகுனியச் சொன்னவன்.
என்று பட்டியலைப் பரதன் முடிக்கிறான். இது கேட்டு கோசலை ‘பரதன் மிகத் தூய்மையான வனே’ என்று ஆனந்தத்தால் விம்முகிறாள். நாமும் பிறர் ஆனந்தமடையுமாறு செய்யலாமே!
See More

(
ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒரு தனிச்சிறப்பு உண்டு!
அந்த காலத்தில் கோவில் கட்டும் போது ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒன்றை தனித்தன்மையுடன் அமைத்தனர்.

ஆனால் ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒரு தனிச்சிறப்பு உண்டு!

அவைகளில் சில:
...
1. உற்சவர் அல்லாமல் மூலவர் வீதியில் வலம் வருவது சிதம்பரம். - நடராஜ கோயில்

2. கும்பகோணம் அருகே “தாராசுரம்” என்ற ஊரில் உள்ள ஐராவதீஸ்வரர் கோவிலில்உள்ள சிற்பத்தில் வாலியும் சுக்ரீவனும் சண்டை இடும் காட்சி உள்ளது. இங்கிருந்து ராமர்
சிற்பம் இருக்கும் தூண் தெரியாது. ஆனால் ராமன் அம்பு தொடுக்கும் சிற்பத்தில் இருந்து பார்த்தால் வாலி சுக்ரீவன் போர் புரியும் சிற்பம் தெரியும் .

3. தர்மபுரி மல்லிகார்ஜுன கோவிலில் உள்ள நவாங்க மண்டபத்தில் இரு தூண்களின் அடி பூமியில் படியாது.

4. கரூர் மாவட்ட குளித்தலை கடம்பவனநாதர் கோவிலில் இரட்டை நடராஜர் தரிசனம் செய்யலாம்.

5. கருடாழ்வார் நான்கு கரங்களுள் இரு கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தியபடி காட்சி தரும் ஸ்தலம் கும்பகோணம் அருகே வெள்ளியங்குடி. 108 திவ்யதேசத்தில் இங்குமட்டும் இது போல் காட்சிதருகிறார்.

6. நாச்சியார் கோவில் கல்கருடன் சன்னதியில் 4 பேர் தூக்குவார்கள் பின்பு 8,16, கோவில் வாசலில் 64 பேர் தூக்கி வருவார்கள் கருடனும் முகத்தில் வேர்வை துளிர்க்கும்.

7. ஸ்ரீபெரும்புதூரில் உள் ராமானுஜர் உருவம் விக்ரஹமோ, வேறு உலோகப் பொருளால் ஆன வடிவமைப்போ இல்லை.குங்குமப்பூ, பச்சை கற்பூரம் கொண்ட மூலிகைப் பொருளால் ஆனது.

8. திருநெல்வேலி-கடையம் அருகே நித்ய கல்யாணி உடனுறை விஸ்வநாதர் கோயிலில் உள்ள வில்வமரத்தில் லிங்க வடிவில் காய் காய்க்கிறது.

9 கும்பகோணம் அருகே திருநல்லூரில் உள்ள சிவலிங்கத் திருமேனி ஒரு நாளைக்கு 5 முறை வெவ்வேறு வண்ணங்களில் நிறம் மாறுவதால் “பஞ்சவர்ணேஸ்வரர்” என்று பெயர்.

10. விருதுநகர், சொக்கநாதன்புத்தூரில் உள்ள தவநந்திகேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நந்திக்கு கொம்போ, காதுகளே இல்லை.

11. ஆந்திராவில் சாமல் கோட்டை அருகே உள்ள 3 பிரதான சாலைகளில் சந்திப்பில் உள்ள 72 அடி ஆஞ்சநேயர்சிலையின் கண்களும்-சில நூறுமைகளுக்கு அப்பால் உள்ள பத்ராசல ஆலயத்தில் ஸ்ரீராமன் திருவடிகளும் ஒரே மட்டத்தில் உள்ளன.

12. வேலூர் அருகே உள்ள விருஞ்சிபுரம் என்ற தலத்தில் உள்ள கோயில் தூணின் தென்புறம் அர்த்த சந்திரவடிவில் 1 முதல் 6 வரையும், 6முதல் 12 வரையும் எண்கள் செதுக்கியுள்ளன. மேற்புறம் உள்ள பள்ளத்தில் வழியே ஒரு குச்சியை நீட்டினால், குச்சியுன் நிழல் எந்த எண்ணில் விழுகிறதோ அதுதான் அப்போது மணி ஆகும்.

13. சென்னை-திருப்பதி சாலையில் ஊத்துக் கோட்டைதாண்டி நாகலாபுரம் என்ற ஊரில் உள்ள ஸ்ரீவேத நாராயண பெருமாள் தலையிலிருந்து இடுப்புவரை மனித உருவம், கிழே மீன்வடிவம் கொண்டுள்ளார்.

14. தருமபுரி – பாப்பாரப்பட்டி {16கி.மீ} இருக்கும் ஸ்ரீ அபிஷ்டவரதர் பெருமாள் கோவிலில் நவக்கிரகங்கள் பெண்வடிவில் உள்ளது.

15. ராமேஸ்வரத்தில் உள்ள அனுமன் கோவிலில் குளத்தில் கல் மிதக்கும்.

Thanks to

mrpandy75.blogspot.i
வீட்டு பூஜை அறையில் இருக்க வேண்டிய ஸ்வாமி படங்கள்...

பூஜை அறையில் ஸ்வாமி படங்களை வைப்பதில் ஒவ்வொருவருக்கும் தனித்தனி கருத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன, சாஸ்த்திர கருத்தானது பூஜையில் இருக்க வேண்டிய படங்கள் என்னன்ன என்பதை பார்ப்போம். விநாயகர்,... வள்ளி,தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமான், ஸ்ரீ.லக்ஷ்மியுடன் கூடிய நாராயணன், அம்பிகையுடன் கூடிய சிவபெருமான், பசுவுடன் அல்லது பத்னியுடன் கூடிய கிருஷ்ணர், தனித்த உருவத்துடன் காணப்படும் படங்கள் என்றால் காமாக்ஷி,மீனாக்ஷி,விசாலாக்ஷி,மற்றும் llலலிதாம்பாள், அஷ்டலக்ஷ்மி. இது தவர பானலிங்கம், சிவலிங்கம்.{ஒரு ஜான் அளவு அதற்கு மேல் போக கூடாது}

கூடாத படங்கள் – {உக்கிர வடிவம் கொண்ட ஸ்ரீ.காளியம்மன்,மகிஷாசுர மர்த்தினி, ஆஞ்சனேயர், நரசிம்ம மூர்த்தி, தனித்த கிருஷ்ணர்,முருகர், பிரத்தியங்கிரா தேவி, சரப மூர்த்தி போன்ற உக்கிர படங்கள் வைக்க கூடாது. {உக்கிர தெய்வங்கள் நமது குல தெய்வமாக இருக்கும் பக்ஷத்தில் அந்த தெய்வப் படம் மட்டும் வைக்கலாம்.} ஆகம நெறிகளை கடைப்பிடிப்பவர்கள் மட்டுமே இப்படங்களை வைத்துக் கொள்ளவேண்டும். மேலும் உடைந்த படங்கள், பின்னமான ஸ்வாமி சிலைகள் இவைகளை வீட்டில் வைத்து பூஜிக்க கூடாது. சமுத்திரத்திலோ ஆற்றிலோ அல்லது ஏரியிலோ விட்டுவிட வேண்டும்.

நமது முன்னோர்கள் படங்களை தனியாக இருக்கவேண்டும் பூஜை அறையில் ஸ்வாமிக்கு நிகராக வைக்க கூடாது.

ஒரு ஜான் {கட்டை விரல் அளவு} மேல் உள்ள விக்கிரங்கள் வைப்பதாக இருந்தால் கண்டிப்பாக தினசரி அன்னம் வைத்து பூஜிக்கப்பட வேண்டும். தினசரியோ அல்லது வாரம் ஒரு முறையோ அபிஷேகம் செய்ய வேண்டும் என சாஸ்த்திரம் தெரிவிக்கிறது.

மேரு,ஸ்ரீ.சக்ரம், மற்றும் யந்திரங்கள் இவைகளை முறைப்படி உபதேசம் வாங்கிக்கொண்டு ஜபம்,தியானம் செய்வதாக இருந்தால் மட்டுமே வீட்டில் வைக்க வேண்டும் தவறினால் சில யந்திரங்கள் விபரீதமான கெடு பலங்களை தரும். சக்தி உபாசகர்கள் மட்டுமே ஸ்ரீ.சக்ரம்,மேரு வைத்து பூஜிக்க தகுதியுள்ளவர்கள் ஆவார்கள். வீட்டில் வலம்புரி சங்கு இருந்தால் அந்த சங்கில் அரிசியோ அல்லது ஜலமோ வைத்து பூஜிக்க வேண்டும் சங்கை காலியாக வைக்கலாகாது. சங்கை எதுவும் போடாமல் இருக்கும் பக்ஷத்தில் கமுத்தி வைக்கலாம். சங்கின் நுனி கிலக்கு திசை நோக்கி இருக்க வேண்டும்.

வேறு ஏதாவது சந்தேகம் இருப்பின் எம்மை தொடர்பு கொள்ளவும்.
தொடர்புக்கு அழையுங்கள் 95973-59423 { 01 to 04pm }
See More
வீட்டில் ஐஸ்வர்யமும், தனமும் என்றும் பெருக - சில அடிப்படை தகவல்களை தெரிந்துகொள்வோம்.....!

1. அதிகாலை 5 மணிக்கு கொல்லைப்புற வாசலைத் திறந்து வைத்து அதன் பின்னரே தலைவாசலைத் திறக்க வேண்டும்.

2. அதிகாலை விழித்தவுடன் பசுவையாவது, தன்முகத்தையாவது..., தன் வலது உள்ளங்கையாவது முதலில் பார்த்துவிட வேண்டும்.

3. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் 5 முகம் கொண்ட குத்துவிளக்கு ஏற்றி திருமகளை வழிபட வேண்டும்.

4. வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும். அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும், சந்தோஷமும் பெருகும்.

5. ஒவ்வொரு பவுர்ணமி அன்றும், மாலை குளித்து சத்ய நாராயணரை துளசி, செண்பக மலர் இவைகளால் அர்ச்சித்து, பால் பாயாசம், கற்கண்டு கனி வகை வைத்து வணங்கிய பின்னரே இரவு உணவு உண்ண வேண்டும்.

6. வைரம், வெள்ளி பாத்திரங்கள் லட்சுமி கடாட்சம் உள்ளவர்களுக்கே கிடைக்கும். ஒருவர் தனக்குச் சீராக அளிக்கப்பட்ட மேற்கூறியவற்றைத் தனது ஜீவித காலத்தில் விற்கவோ, தன் பிள்ளைகளுக்கோ கூட அன்பளிப்பாகவும் கொடுக்கக் கூடாது. தன் காலத்திற்குப் பின்னரே அவர்களுக்கு சேர வேண்டும். முடிந்தால் அவர்களுக்கு புதியதாக வாங்கிக் கொடுக்கலாம்.

7. ஒருவருக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்றால் வாசல் படியில் நின்று கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல்படிக்கு உள்ளே இருந்து வாங்க வேண்டும் அல்லது கீழே இறங்கி வாங்க வேண்டும்.

8. வாசல்படி, உரல், ஆட்டுக்கல், அம்மி இவைகளில் உட்காரக்கூடாது.

9. இரவு நேரங்களில் பால், மோர், தண்ணீர் அடுத்தவர்கள் எடுத்து செல்ல அனுமதிக்க கூடாது.

10. வெற்றிலை, வாழை இலை இவைகளை வாடவிடக் கூடாது, வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது.

11. சுண்ணாம்பு இல்லாமல் வெற்றிலையை போடக் கூடாது.

12. குத்து விளக்கை தானாக அணைய விடக்கூடாது, ஊதியும் அணைக்க கூடாது. புஷ்பத்தினாலும் அணைக்க கூடாது.

13. வீட்டில் யாரையும் சனியனே என்று திட்டக்கூடாது. இழவு என்றும் கூறக்கூடாது.

14. அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்த கூடாது

15. துணிமணிகளை உடுத்திக் கொண்டே தைக்கக் கூடாது.

16. உப்பைத் தரையில் சிந்தக் கூடாது. அரிசியைக் கழுவும் போது தரையில் சிந்தக் கூடாது.
See More

— with Jayanthe Ramasamy and 45 others.
மாசி மகம் பற்றிய தகவல்.

1. மகாவிஷ்ணுவாக அவதாரம் எடுத்தது மாசி மகத்திருநாளில் தான்.

2. மாசி மாதத்து சங்கடஹர சதுர்த்தி மிக விசேஷம். அந் நாளில் விரதம் இருப்பவர்கள் எல்லாவித தோஷங்களிலிருந்தும் விடுபடுவர்.
...
3. மாசி மாதத்தன்று தான் பார்வதிதேவி காளிந்தி நதியில் ஒரு தாமரை மலரில் வலம்புரிச் சங்காகத் தோன்றினாள்.

4. சிவபெருமான் திருவிளையாடல்கள் பல புரிந்தது மாசிமாதத்தில் தான்.

5. மாசி மாதத்தன்று மந்திர உபதேசம் பெறுவது சிறந்ததாகத் கருதப்படுகிறது.

6. குலசேகர ஆழ்வார் மாசி மாதம் புனர்பூச நட்சத்திர நாளில் தான் அவதரித்தார்.

7. அன்னதானத்தில் பெருமைகளை உணர்த்துவது மாசி மகம் தான்.

8. மாசி மாத பூச நட்சத்திரம் தினத்தன்று தான் முருகப் பெருமான் சுவாமி மலையில் தன் தந்தை சிவபெருமானுக்கு உபதேசம் செய்தார்.

9. பிரம்மஹத்தி போன்ற பெரும் பாவங்களைப் போக்கி பேய்க்கும் நற்கதி கொடுக்கும் இரு ஏகாதசிகள் வருவது மாசி மாதத்தில் தான்.

10. உயர் படிப்பு படிக்க விரும்புபவர்கள் ஆராய்ச்சி செய்ய விரும்புபவர்கள் மாசிமக நாளில் அவற்றைத் துவங்கினால் அதில் சிறந்து விளங்கலாம்.

11. அகத்தியர் தன் விருப்பங்கள் நிறைவேற தவம் இருந்து அருள் பெற்றது மாசிமாதத்தில் தான்.

12. காரடையான் நோன்பும் சாவித்ரி விரதமும் இம்மாதத்தில் வரும் விசேஷ விரதங்கள். மாசி மகத்தன்றுதான் காமதகன் விழா நடைபெறுகிறது.

13. மாசி மாதத்தில் வீடு குடி போனால் வாடகை வீடாக இருந்தாலும் அவ் வீட்டில் அதிக நாட்கள் வாழ்வார்கள். எனவே இம்மாதத்தில் புது வீடு கிரகப்பிரவேசம் நடத்தலாம்.

14. இம் மாதத்தை மாங்கல்ய மாதம் என்றும் கூறுவர்.

15. மாசி மக நட்சத்திரத்தில் பிறப்போர் ஜனத்தை ஆள்வர் என்பதும் மாசிக் கயிறு பாசி படியும் என்பதும் பழமொழி. இம் மாதத்தில் பெண்கள் புது மாங்கல்யச் சரடு கட்டிக் கொள்வது சிறப்பானது.

16. மாசிமகம் ஸ்தானம் செய்வேருக்கு சிவனும், விஷ்ணுவும் உரிய பலன் தருவார்கள். அன்று புண்ணிய நதியில் ஒருமுறை மூழ்கி எழுவோருக்கு பாவங்களை விலக்குவார்கள். இரண்டாம் முறை மூழ்கி எழும் போது சொர்க்கப் பேறு தருவார். மூன்றாம் முறை மூழ்கி எழும் போது அவர்கள் புண்ணியத்திற்கு ஈடான பலனாக எதைக் கொடுக் கலாம் என ஈசனே திணறுவாராம்.

17. மாசிமக புனித நீராடல் செய்ய இயலாதோர் மாசி மக புராணம் படிக்கலாம். அல்லது கேட்கலாம் அதுவும் புண்ணியமே.

18. மாசி மகத்தன்று நெல்லையப்பர் கோவில் பொற்றாமரை தீர்த்தத்தில் திருநாவுக்கரசருக்கு தெப்ப விழா நடத்துவர். இதற்கு அப்பர் தெப்பம் எனப் பெயர்.

19. மாசிமகத்தன்று கடல் நீராடலாம். அப்போது பூமியில் காந்த சக்தி உண்டாவதால், நீர் நிலைகளில் புதிய ஊற்றுகள் உண்டாகி அதில் காந்த சக்தி கரையும். அச்சமயத்தில் நீராடுவோர் மனமும் உடலும் ஆரோக்கியமாகும்.

20. ராமநாதபுரம் எமனேஸ்வர சிவாலய சிவன், எமனால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். இவ்வாலய எமதீர்த்தத்தில் மாசி மகத்தன்று தெப்ப விழா நடக்கும் சிவ அம்சமாக முருகன் தீர்த்தத்திற்கு எழுந்தருள்வார்.

21. திருச்செங்கோடு பஸ் நிலையம் அருகேயுள்ளது சின்ன ஓம்காளி ஆலயம். இங்கு மாசி மாதம் 16 நாட்கள் குண்டவிழா நடைபெறுகிறது.

22. மாசி மாதத்தில் அதிகாலை எழுந்து குளித்தபின் துளசியால் மகாவிஷ்ணுவை வழிபட்டால், வைகுண் டத்தில் இடம் கிடைக்கும்.

23. மாசிமக நாளில் அம்பிகையை குங்குமத்தால் அர்ச்சித்து வழிபடுபவர்களுக்கு, இன்பமும் வெற்றியும் தேடி வரும்.

24. மாதத்தின் சுக்ல பஞ்சமியில் ஸ்ரீசரஸ்வதி தேவியை மணமுள்ள மலர்களால் அலங்கரித்து வழிபட்டால், கல்வியில் சிறந்து விளங்கலாம்.

25. கும்பகோணம் மகாமக குளத்தில் நீராடுவதற்கு அமாவாசை, பவுர்ணமி, மாதப் பிறப்பு, வெள்ளிக் கிழமை, கார்த்திகை நட்சத்திரம், சிவராத்திரி, மாசிமகம், மகாமகம் ஆகிய நாட்கள் சிறப்பானதாகும்.......
See More
ஆன்மீகம் என்கின்ற ஒரு புத்தகத்தில் இருந்து சில தகவல்கள் :-

திசைக்கேற்ற தெய்வ வழிபாடு

* சூரிய திசை நடப்பவர்களுக்கு சிவன் வழிபாடு சிறப்பு தரும்....

* சந்திர திசை நடப்பவர்களுக்கு அம்பிகை வழிபாடு நன்மை தரும்.

* செவ்வாய் திசை நடப்பவர்களுக்கு முருகன் வழிபாடு நன்மை தரும்.

* புதன் திசை நடப்பவர்களுக்கு விஷ்ணு வழிபாடு விருப்பங்களை நிறைவேற்றும்.

* வியாழ திசை நடப்பவர்களுக்கு தென்முகக் கடவுள் வழிபாடு திருப்தி தரும்.

* சுக்ர திசை நடப்பவர்களுக்கு சக்தி, அபிராமி வழிபாடு பலன் தரும்.

* சனி திசை நடப்பவர்களுக்கு அனுமன் வழிபாடு மடைபளை அகற்றும், ராகு திசை நடப்பவர்கள் துர்க்கையையும், கேது திசை நடப்பவர்கள் விநாயகரையும் வழிபடுவது நல்லது.

Saturday, February 8, 2014



கோவில் கோபுர உயரம்...

1, ஸ்ரீரங்கம் – 236 அடி
2, திருவண்ணாமலை – 217 அடி ராஜகோபுரம் கிழக்கு.
3, தஞ்சாவூர் – 216 அடி பிரகதீஸ்வரர் கோபுரம்
4, ஆவுடையார் கோவில் – 200 அடி
5, தென்காசி – 178 அடி
6, கங்கைகொண்ட சோழபுரம் – 174 அடி
7, மதுரை – 170.8 அடி தெற்கு கோபுரம்
8, ஸ்ரீவில்லிப்புத்தூர் – 164 அடி வடபத்ர சாயி கோபுரம்
9, மன்னார்குடி – 154 அடி
10, குடந்தை சாரங்கபாணி கோவில் – 147 அடி
11, சிதம்பரம் – 140 அடி வடக்கு கோபுரம்
12, திருவானைக்கா – 135 அடி கீழ கோபுரம்
13, சுசீந்திரம் – 134 அடி
14, திருவாடனை – 130 அடி
15, குடந்தை கும்பேஸ்வரர் – 128 அடி
16, இராமேஸ்வரம் – 126 அடி கிழக்கு கோபுரம்
17, திருச்செந்தூர் – 127 அடி
18, சங்கரன் கோவில் – 125 அடி
19, திருவாரூர் – 118 அடி கீழ கோபுரம்
நாம் செய்த பாவ புண்ணியங்கள் கருப்பா, சிகப்பா, உருவமா தெரியாது 

அது நமக்கு நடக்கும் சம்பவங்களை பொறுத்துதான் உணர முடியும்,

நம் வாழ்வின் சம்பவங்கள் இனிமையாக நடக்க இறைவனை அறிந்து அவனோடு கலந்த ஞானிகள் பாதையை பின்பற்றுவோம் -

நமக்கு நடக்கும் சம்பவங்களை நல்லதாக மாற்றிக்கொள்வோம்

https://www.youtube.com/channel/UCJzBfSwZSy2SSX-upaKtvZQ

விரும்புகிறவர்கள் இந்த channel subscribe செய்துகொள்ளவும்

ஞானிகள் கூறும் ஆன்மீக வழிமுறைகள்
www.yout


ராமாயணம், மஹாபாரதம் எல்லாம் உண்மையா சோ அவர்கள் விளக்கம்..

கேள்வி : இந்த ராமாயணம், மஹாபாரதம் எல்லாம் உண்மையாகவே நடந்தனவா? எல்லாம் வெறும் கற்பனைதானே?

சோ அவர்கள் பதில் : கற்பனை என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?

கேள்வி கேட்பவர் : அப்படித்தான் சொல்கிறார்கள்.

பதில் : அப்படிச் சொல்பவர்கள் எல்லாம்தான் இதில் அத்தாரிட்டியா? அவர்கள் சொல்வதே இறுதி முடிவா? இப்பொழுது நான் உங்களை ஒன்று கேட்கிறேன். உங்களுடைய தாத்தாவிற்குத் தாத்தாவிற்குத் தாத்தாவிற்குத் தாத்தாவிற்குத் தாத்தா என்று ஒருவர் இருந்தார் அல்லவா?

கேள்வி கேட்பவர் : ஆமாம்.

பதில் : அவர் நல்ல மனிதரா?

கேள்வி கேட்பவர் : ரொம்ப நல்ல மனிதர். நேர்மையானவர்.

பதில் : உங்களுக்கு அது எப்படித் தெரியும்?

கேள்வி கேட்பவர் : என்னுடைய தாத்தா சொல்லியிருக்கிறார். அவருக்கு அவருடைய தாத்தா சொல்லியிருக்கலாம்.

பதில் : உங்கள் தாத்தா சொன்னதை உண்மை என்று நம்புகிறீர்கள். வியாஸர், வால்மீகி இவர்கள் எல்லோருக்கம் முன்னால் வாழ்ந்தவர்கள். எல்லோருக்கும் தாத்தா. அவர்கள் சொன்னால் நம்ப மாட்டீர்களா?

கேள்வி கேட்பவர் : இதையெல்லாம் விடுங்கள். இந்தப் புராணம், இதிஹாசம் இவையெல்லாம் பிராமணர்கள் மற்றவர்களை டாமினேட் செய்வதற்காக எழுதி வைத்த விஷயங்கள்தானே?

சோ அவர்கள் பதில் :

பிராமணர்கள் எழுதி வைத்தது என்று சொல்கிறீர்கள். மஹாபாரதத்தை எழுதிய வியாஸரோ, ராமாயணத்தை எழுதிய வால்மீகியோ பிராமணர்கள் அல்ல. வியாஸர் ஒரு மீனவப் பெண்மணிக்குப் பிறந்தவர். வால்மீகி ஒரு வேடுவர். சரி. பிராமணரில்லாத இவர்கள், யாரைப் பற்றி எழுதி வைத்தார்கள்?

வால்மீகி சொன்னது – ராமரைப் பற்றி. ராமரோ ஒரு க்ஷத்ரியன். வியாஸர் சொன்னது – கிருஷ்ணரைப் பற்றி. கிருஷ்ணரோ இடையர் குலத்தைச் சார்ந்தவர்.

இப்படி பிராமணரல்லாத ராமர், கிருஷ்ணர் இவர்களைப் பற்றி, பிராமணரல்லாத வால்மீகியும், வியாஸரும் எழுதி வைத்ததுதான் ராமாயணமும், மஹாபாரதமும்.

சொன்னவர்களும் பிராமணர்களில்லை; சொல்லப்பட்டவர்களும் பிராமணர்கள் இல்லை. இப்படிப்பட்ட விஷயத்தை பிராமணர்கள், மற்றவர்களை டாமினேட் செய்வதற்காக எழுதி வைத்தது என்று எப்படிச் சொல்கிறீர்கள்?

சரி, வியாஸரோ, வால்மீகியோ கூட பிராமணர்கள் இல்லா விட்டாலும், அவர்களுடைய எண்ணம் ‘பிராமணர்களை உயர்த்திக் காட்ட வேண்டும்’ என்று இருந்திருந்தால், அவர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? ஒரு பிராமண கதாபாத்திரத்தை அல்லவா அவர்கள் மிக உயர்ந்ததாகக் காட்டியிருக்க வேண்டும்? ‘ஒரு பிராமணர்; அவர் சக்ரவர்த்தியாக இருந்தார்; அவரை மாதிரி ஒரு அரசர் இருந்ததே கிடையாது; மிகப் பெரிய வீரர்; அது மட்டுமல்ல, நியாயம் தவறாதவர்; எல்லோரிடமும் கருணை காட்டுபவர்…’ என்றல்லவா எழுதியிருக்க வேண்டும்? அப்படிச் சொல்லவில்லையே அவர்கள்?....

நன்றி ஹரிஹரன்..