ஸ குங்கும விலேபனாம் அளிக சும்பி கஸ்தூரிகாம் ஸமந்த ஹஸிதேக்ஷணாம் ஸ ஸரஸாப பாசாங்குசாம் அசேஷஜ நமோஹினீம் அருணமால்ய பூஷாம்பராம் ஜபாகுஸூம பாசுராம் ஜப விதௌ ஸ்மரேத் அம்பிகாம் என்று லலிதாசகஸ்ரநாமத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
அதாவது குங்குமப்... பூவின் விழுதைப் பூசிக் கொண்டிருப்பவளும், நெற்றியை அலங்கரிக்கும் கஸ்தூரி திலகம் இட்டவளும், புன்னகைக்கும் கண்கள் உள்ளவளும், வில், அம்பு, பாசம், அங்குசம் ஏந்தியவளும், எல்லா மக்களையும் தன்பால் ஈர்ப்பவளும், செந்நிற மாலை, ஆடைகள் அணிந்து, செம்பருத்திப் பூ போல ஒளிமயமாக இருப்பவளுமான அம்பிகையை ஜபகாலத்தில் நினைவு கொள்கிறேன் என்பதுதான் இதன் பொருள். அம்பாள் உமைக்கு பல அம்சங்கள். திரிபுரசுந்தரி, காமாட்சி, அபிராமி, பார்வதி, லலிதா என்று பல திருநாமங்கள். ஒவ்வொரு அம்சத்திலும், பல பாக்கியங்களை பக்தர்களுக்கு அள்ளித் தருகிறாள் அம்பாள். எப்போதும் சுமங்கலியாகவே இருப்பவள் லலிதா” என்று லலிதா சகஸ்ரநாமத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. சுமங்கலியான பெண்ணை பளிச்சென்று வெளிப்படுத்துவது, அவளது நெற்றியில் அலங்கரிக்கும் குங்குமம்தான். ஒரு பெண் தன் திருமணத்தின் போதுதான் குங்குமம் வைத்துக் கொள்ளும் தகுதியைப் பெறுகிறாள். நெற்றியிலுள்ள குங்குமம், ஒரு பெண்ணின் சுமங்கலித் தன்மையை மட்டும் சொல்வதல்ல. அவளுக்குள்பொதிந்திருக்கும் ஞானத்தையும், ஆற்றலையும் குறியீடாக உணர்த்தும் தன்மையும் கொண்டது. சௌந்தர்ய லஹரியும் லலிதா சகஸ்ரநாமமும் குங்குமத்தின் பெருமைகளை எடுத்து வைக்கின்றன.
சுமார் 5,000 வருடங்களாக, குங்குமம் வைத்துக் கொள்வது என்பது நமது சம்பிரதாயமாக இருந்து வருகிறது என்கிறது ஒரு புராணத் தகவல். இரண்டு இமைகளுக்கு நடுவில் நெற்றிப் பொட்டில் குங்குமம் வைத்துக் கொள்வதற்குப் பல காரணங்கள் உண்டு. நமது உடலில் ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் ஏழு சக்கரங்கள் உள்ளன. நமது செயல்கள், சாதனைகள், சாகசங்கள் என்று அனைத்துக்குமே காரணமாக அமைந்தவை இந்தச் சக்கரங்கள். இந்தச் சக்கரங்களின் செயல்பாட்டைத் தூண்டி விடுவதில், முதுகுத் தண்டுக்கு அடிப்பகுதியில் பொக்கிஷமாக இருக்கும் குண்டலினி சக்திக்கு பெரும்பங்கு உண்டு. யோகம், தியானம் போன்றவற்றின் மூலம் குண்டலினி சக்தியை எழுப்பி, இந்த ஏழு சக்கரங்களைத் தூண்டி விடலாம். இந்த ஏழு சக்கரங்களில் ஒன்றான ஆக்ஞை, நெற்றிப்பொட்டில், புருவங்களின் மத்தியில்தான் உள்ளது. ஒருவரின் ஞானம், பேரறிவு ஆகியவை வெளிப்பட காரணமாக அமைவது இந்த ஆக்ஞா சக்கரம் தான். அதைக் குறித்துத்தான் நெற்றிப்பொட்டில் குங்குமம் வைக்கிறோம்.
ஆனால் திலகமிடுவது மங்கள குறியீடு மட்டுமல்ல அதனுள் வேறு சில அர்த்தங்களும் பொதிந்துள்ளது
மனிதனது மூளையின் மையப்புள்ளி இரண்டு புருவங்களுக்கு மத்தியில் அமைந்துள்ளது இதன் வழியாக பிரபஞ்ச ஈர்ப்பு விசையும் வேறு மனிதர்களின் என்ன பதிவுகளும் நேரடியாக மூளையில் பதிந்து அதற்கான அதிர்வுகளை உருவாக்குகிறது அந்த அதிர்வுகள் நல்லதாக இருக்கும் பட்சத்தில் சிக்கல்கள் இல்லை வேறுமாதிரியாக அமைந்தால் பிரச்சனை தான்
வேறு மாதிரியான அதாவது எதிர்மறையான பதிவுகள் மூளையை அண்டாமல் புருவங்களுக்கு மத்தியில் வைக்கப்படும் திலகமோ விபூதி மற்றும் சந்தனமோ தடுத்துவிடுகிறது இதனால் நமது மூளையானது எப்போதும் எதிர்மறை சக்திகளால் தாக்கப்படுவது தவிர்க்க பட்டு விடுகிறது எனவே தான் நமது முன்னோர்கள் வெறும் நெற்றியோடு யாரும் இருக்க கூடாது என்று சொன்னார்கள்.See More